மதுரை அருகே போக்குவரத்து நெரிசல்: போலீஸார் கண்டு கொள்வார்களா?
மதுரை சிவகங்கை சாலையில், கருப்பாயூர ணியில், தினசரி காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் வானங்கள் சிக்கித் தவிக்கின்றன;
மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில், கருப்பாயூரணி அருகே பெரிய பள்ளிகள் இயங்கி வருகிறது. இப்பள்ளிகளுக்கு தினசரி காலை நேரங்களில், காலை 8 மணி முதல் 9 மணி வரை நான்கு சக்கர வாகனங்களும், இருசக்கர வாகனங்களில் மாணவ மாணவிகளை பெற்றோர்கள் இறக்கி விடுவது வழக்கம். இதேபோன்று, கருப்பாயூரணி அப்பர் பள்ளி அருகே தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் ஆட்டோக்கள் சாலையின் இருபுறங்களில்,நிறுத்தி ஆட்கள் ஏற்றுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
அத்துடன் இப்பகுதியில் நான்கு சக்கர வாகனங்களும் சாலை ஓரமாக இரு புறங்களில் நிறுத்தப்படுகிறதாம். இதனால், தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில மாதங்கள் வரை தினசரி காலை நேரங்களில், மதுரை மாவட்ட போலீசார், போக்குவரத்து காவலர்கள் நிறுத்தி வாகனங்கள் செல்வதற்கு எதுவாக செய்து வந்தனர். ஆனால் ,கடந்த சில நாட்களாக கருப்பாயூரணி அப்பர் மேல்நிலைப்பள்ளி அருகே போக்குவரத்து போலீசார் இல்லாததால், சிவகங்கை, வரிச்சூர், பூவந்தி, கல்மேடு நகர், ராசாக்கூர் ஆகிய பகுதியிகளிலிருந்து, மதுரையை நோக்கி வரும் ஆட்டோக்கள் இருபுறங்களும் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்யப்படுகிறது.
இதனால், மதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில் தினசரி காலை 8 மணி முதல் 9 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ,ஆட்டோக்கள் விதியை மீறி அதிகளவில் பயணிகளை ஏற்றுவதற்காக, அரசு பேருந்துளை முந்தி செல்கிறது.
இதனால், கடும் நெருக்கடி ஏற்பட்டு, மதுரையில் இருந்து கருப்பாயூரணி செல்லும் இருசக்கர வாகனங்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றன. இது குறித்து ,மதுரை வட்டார போக்குவரத்து அலுவலரும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து, சாலையில் போக்குவரத்து இடையூறு செய்யும் ஆட்டோக்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மதுரையில் இருந்து சிவகங்கை செல்வதற்கு வாகன இடையூறு இல்லாமல் அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.