மதுரை: பொதுமக்கள் இன்றி கோவில் குளத்தில் நடந்த தெப்பத்திருவிழா

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா, பக்தர்களின்றி பொற்றாமரைக் குளத்தில் எளிமையாக நடந்தது.

Update: 2022-01-19 10:30 GMT

பக்தர்களின்றி, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற தெப்பத்திருவிழா. 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும், பல ஆயிரம் மக்கள் முன்னிலையில், மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில், தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழாவானது, பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தில், எளிமையாக நடைபெற்றது. தெப்பத்தில் எம்பெருமான் பவனி வந்தார். தெப்பத்திருவிழாவை நேரில் காண இயலவில்லையே என்று பக்தர்கள் பலரும் தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தினர்.

Tags:    

Similar News