ஊர்ப்பெயரை பிழையின்றி எழுதி வைக்க வேண்டும்: நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை
நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுத்து, பிழையின்றி பெயர் பலகையை வைக்க முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்;
மதுரை அருகேயுள்ள ஊரின் பெயரை ஆங்கிலத்தில் சரியாகவும் தமிழில் தவறாகவும் எழுதப்பட்டுள்ளதாக மக்கள் புகார்
மதுரை நெடுஞ்சாலை துறை கவனத்துக்கு..
தமிழகத்தில், சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினர், சாலைகளை சீரமைக்கும் போது அந்த ஊரின் பெயரை தமிழில் பெயர் பலகையாக கிராமங்களில் பொருத்தி வருகின்றனர்.அவ்வாறு, பொருத்தப்படும் பெயர் பலகையில், பல இடங்களில் பிழைகள் காணப்படுகிறது. அவசரமாக இப் பணி மேற்கொள்ளப்படுவதால், பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுத்து, பிழையின்றி பெயர் பலகையை வைக்க முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர். மதுரை அருகே கடச்சனேந்தல் பகுதிக்கு பிழையாக நெடுஞ்சாலைத் துறையினர் பெயர் பலகை வைத்துள்ளனர். பிழை நீக்கி, ஊர் பெயரை வைக்க, சம்பந்தப்பட்ட துறையினர் கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.