மதுரை அருகே நாயும் பூனையும் நண்பர்களாய் வாழும் அதிசயம்
செல்லமாகச் சண்டையிட்டு அன்பை வெளிப்படுத்தி வருவதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச்செல்கின்றனர்;
மதுரை மாவட்டம், மேலூர் அருகே நாயும் பூனையும் நட்புடன் கொஞ்சி மகிழ்வது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கம்பூைரை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் வளர்க்கும் நாயும் பூனையும் ஒன்றோடு ஒன்று கொஞ்சி மகிழ்வதும், நாய் தனது வாயால் மூலம் பூனையின் தலையை கவ்வி விளையாடுவதும் பார்ப்பவர்களை ஒருவித அச்சத்தில் ஆழ்த்தினாலும், இரு விலங்குகளின் ஆழ்ந்த நட்பையும் உறவையும் பிரதிபலிப்பதாக உள்ளது. பொதுவாக நாய்க்கும் பூனைக்கும் ஏழாம்பொருத்தம் என்பார்கள் அந்த வகையில் நாயும் பூனையும் எதிரிகளாக பார்க்கப்படும்.
இச்சூழலில் மேலூர் அருகே சுவாரஸ்ய நிகழ்வாக கம்பூரில் சிவலிங்கம் என்பவர் வீட்டில் வளர்க்குக் பெண் நாயும் அவர் வளர்க்கும் பெண் பூனையும் ஒன்றோடு ஒன்று வீட்டில் கொஞ்சி குலாவி விளையாடி மகிழ்கிறது. மேலும் செல்ல சண்டையிட்டு அன்பை வெளிப்படுத்தி வருவதை, அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச்செல்கின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .