பருவ மழையால் 10 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிப்பு: அமைச்சர் தகவல்

. வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்தால் மக்களை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

Update: 2021-11-15 02:15 GMT

அமைச்சர் பிடிஆர். பழனிவேல்தியாகராஜன்

பருவமழையால் 10 எக்டேர் நிலபரப்பு மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது என்றார் தமிழக நிதியமைச்சர்பழனிவேல் தியாகராஜன்

மதுரை மாவட்டத்தில்  வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்தால் மக்களை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சாத்தையாறு அணை நிரம்பும் நிலையில், உபரிநீரை வடகிழக்கு கண்மாய்களுக்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் 10 எக்டேர் நிலபரப்பு மட்டுமே பாதிக்கப்பட்டது என்றார்.அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் டி.என்.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர்செந்தில்குமாரி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சூர்யகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News