மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமி விழா
இத்திருக்கோவிலில் வராகி அம்மனுக்கு பக்தர்கள் மஞ்சள் காப்பு அணிவித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவர்;
தேய்பிறை பஞ்சமி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கி விநாயகர் திருக்கோவிலில் தேய்பிறை பஞ்சமி முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை காலை 10:15 மணிக்கு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது
திருக்கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமிகளில் இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சந்நிதியில் மகா யாகமும் அதைத் தொடர்ந்து வராகி அம்மனுக்கு பால் தேவை இளநீர் சந்தனம் பன்னீர் போன்றவைகளை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் ஆகி அர்ச்சனைகள் நடைபெறும்
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வர் இதை எடுத்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசார வழங்கப்படும் இத்திருக்கோவிலிலே வராது அம்மனுக்கு பக்தர்கள் மஞ்சள் காப்பு அணிவித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவர். மேலும் பானகம், நீர், மோ,ர் பிரசாதங்கள் படைத்தும் விரலி மஞ்சள் மாலை அணிவித்தும் வராகி மணி பக்தர்கள் வழிபடுவர். இது தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை சௌபாக்கி விநாயகர் ஆலய நிர்வாகக் குழுவினர் மற்றும் ஆன்மீக மகளிர் குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
இவை தவிர இந்த திருக்கோயிலில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ராகு வேளையில், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழம் தீபம் ஏற்றி வழிபடுவர். மேலும், இக்கோயிலில், சனி பகவான், யோக சனீஸ்வரனாக அருள்பாலிக்கிறார்.இவரை வாரந்தோறும் சனிக்கிழமை காலை எள் தீபம் ஏற்றி ஒன்பது தடவை வலம் வந்தால், தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.