மதுரையில், சொத்து வரி செலுத்துவோருக்கு வரி சலுகை:மாநகராட்சி ஆணையர்..!

சொத்து வரி செலுத்துவோருக்கு, தள்ளுபடி வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

Update: 2024-10-12 13:15 GMT

மதுரை மாநகராட்சி ஆணையர்.

சொத்து வரி செலுத்துவோருக்கு, தள்ளுபடி வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர்  அறிவித்துள்ளார்.

மதுரை:

மதுரை மாநகராட்சி அக்டோபர் 31 ஆம் தேதிக்குள், சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5% சதவீதம் தள்ளுபடி.வழங்கப்படவுள்ளது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில், உள்ள பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்பு கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும், வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி 2024-2025 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை எதிர்வரும் 31.10.2024 தேதிக்குள் செலுத்தும் சொத்துவரி உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில்,5% சதவீதம் (அதிகபட்சமாக ரூ.5000) தள்ளுபடி வழங்கப்படும். எனவே,மதுரை மாநகராட்சி 100 வார்டுப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை 2024 அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி 5% சதவீதம் தள்ளுபடியினை, பெற்றிடுமாறும், மதுரை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில், தங்களது பங்களிப்பை வழங்குமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப் படுகிறது.

Tags:    

Similar News