மதுரை மாவட்டத்தில் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

திருட்டு சம்பவங்களை ஈடுபடுவார்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் எச்சரித்தார்.

Update: 2022-09-24 11:00 GMT

இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து நபர்களை போலீசார் கைது செய்தனர்

மதுரை மாவட்டத்தில் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட  போலீஸ் எஸ்.பி. எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக  மதுரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சிவபிரசாத் கூறியதாவது: திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலையம், செக்கானூரணி காவல் நிலையம், அலங்காநல்லூர் காவல் நிலைய சரகத்தில் இருசக்கர வாகனங்கள் திருடு போனது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வந்தது. இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து நபர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஐந்து ஹீரோ ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி வழக்கின் எதிரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மதுரை மாவட்டத்தில் திருட்டு சம்பவ குற்றங்களில் ஈடுபடுவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து திருட்டு சம்பவங்களை ஈடுபடுவார்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் எச்சரித்தார்.

Tags:    

Similar News