மதுரை மிஷன் மருத்துவமனையில் கால்சியம் குறைபாடு தொடர்பாக கருத்தரங்கம்
வைட்டமின்கள் குறைவாலும், சரியானபடி உணவை உட்கொள்ளாததும் கால்சியம் குறைபாடு ஏற்பட முக்கிய காரணங்கள்;
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், கால்சிம் சத்துக் குறைபாடு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், எலும்பு தேய்மானம் தொடர்பான கருத்தரங்கு நடந்தது. இக் கருத்தரங்கில், மருத்துவமனையின் எலும்பு மூட்டு மாற்று சிகிச்சை நிபுணர் டாக்டர் சத்தியநாராயணன் கூறியது:இந்தியாவில், அதிகப்படியான நபர்கள் மூட்டு வலியாலும், எலும்புகள் தேய்மான பிரச்னையாலும் அவதிப்படுகின்றனர். இதற்கு எல்லாம் காரணம், கால்சியம் குறைப்பாடு தான். வைட்டமின்கள் குறைவாலும், சரியானபடி உணவை உட்கொள்ளாததும் கால்சியம் குறைபாடு ஏற்பட முக்கிய காரணங்களாகும் என்றார்.