மதுரை அருகே மதுபான கடையில் உள்ள மதுக் கூடத்துக்கு சீல்

உரிமத்தொகை செலுத்தாமல், சட்டவிரோதமாக மதுக்கூடம் நடைபெறுவது தெரியவந்தது;

Update: 2021-11-11 15:15 GMT
பைல் படம்.

மதுரை அருகே  அனுமதியின்றி நடத்திய டாஸ்மாக் மதுக்கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

மதுரை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக 26.04.2021-அன்று முதல் மூடப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு உத்தரவிற்கிணங்கி 01.11.2021 முதல் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நேர்வில் 10.11.2021-அன்று கடச்சனேந்தல் பகுதியில் செயல்பட்ட கடை எண்.5421 உடன் இணைந்த மதுக்கூடத்தினை மாவட்ட மேலாளர் மதுரை வடக்கு, திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, உரிமத்தொகை செலுத்தாமல், சட்டவிரோதமாக மதுக்கூடம் நடைபெறுவது தெரியவந்தது. அரசுக்கு சட்டவிரோதமாக செயல்பட கூடாது என எச்சரித்து கடை எண்.5421 உடன் இணைந்த மதுக்கூடத்தினை சீல் வைக்கப்பட்டது என, மதுரை வடக்கு மாவட்ட மேலாளர் .க.நஜிமுன்னிசா தெரிவித்தார்.

Tags:    

Similar News