விசாக நட்சத்திர சிவன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா: சிறப்பு வழிபாடு

Sanipeyarchi Special Pooja மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளய நாத சுவாமி விசாக நட்சத்திர ஆலயத்தில், சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.;

Update: 2023-12-21 08:44 GMT

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், உள்ள சனீஸ்வரலிங்கம்.

Sanipeyarchi Special Pooja

சனி பகவான், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரதேசத்தை முன்னிட்டு, இத்திரு கோவில் அமைந்துள்ள சனீஸ் லிங்கம் மற்றும் சனி பகவானுக்கு சிறப்பு ஹோமங்களும் அதைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது. இக்கோவிலானது, சனி, ராகு, குரு, ஆகிய கிரகங்கள் இணைந்த புனிதமான திருக்கோயில் ஆகும். திருக்கோயில் விசாக நட்சத்திரத்துக்குரிய ஆலயமாக விளங்குகிறது. மேலும், இக் கோயிலில்,

Sanipeyarchi Special Pooja


சனிப் பெயர்ச்சி சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள்  

சனி பகவான் லிங்க வடிவில் வன்னி மரத்துக்கு அடியில் அருள்பாளித்துக் கொண்டிருக்கிறார். சனிப்பெயர்ச்சி முன்னிட்டு, இக்கோயிலில் சனி பிரீதி ஹோமங்களும், நவகிரகோமங்களும் வேத விற்பனர்களால் நடத்தப்பட்டது. திருக்கோவில் செயல் அலுவலர் இளமதி முன்னிலையில், தொழில் அதிபர் எம்.வி. எம் .

மணி ,பள்ளித் தாளாளரும், கவுன்சிலுருமான டாக்டர் மருது பாண்டியன் ஆகியோர் ஏற்பாட்டில், சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ,பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள்  சிறப்பு ஹோமத்தில் பங்கேற்றனர்.

 பக்தர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, தொழில் அதிபர் எம்.வி.எம். மணி, கோயில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் பூபதி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

முன்னதாக, இக் கோயிலில் காலபைரவர் சன்னதி அருகே அமைந்துள்ள சனீஸ்வரலிங்கத்துக்கு, சிறப்பு அபிஷேகங்களும், அர்ச்சனைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News