ஆபத்தை உணராமல் நீர் நிலைகளில் இறங்கும் பொது மக்கள்: தேவை போலீஸார் நடவடிக்கை
ஆபத்தை உணராமல் கண்மாய் மதகுகள் மேல் நின்று வேடிக்கை பார்ப்பதும் கலிங்கிப் பகுதிக்கு மக்கள் செல்வதும் அதிகரித்துள்ளது;
நிரம்பி வழியும் மதுரை வண்டியூர் கண்மாய்.
ஆபத்தை உணராமல் நீர் நிலைகளை வேடிக்கை பார்க்கும் பொதுமக்களை காவல்துறையினர் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரையில் பெய்த பலத்த மழையால் வண்டியூர் கண்மாய் நிரம்பி கலிங்கி வழியாக உபரிநீர் வெளியேறுகிறது. ஆபத்தை உணராமல் கண்மாய் மதகுகள் மேல் நின்று வேடிக்கை பார்ப்பதும் வெளியேறும் கலிங்கிப் பகுதியிில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், கடந்த சில நாள்களுக்கு முன்பு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொது மக்கள் யாரும் நீர் நிலைகளில் இறங்கக் கூடாது, கால்நடைகளை குளிக்க வைக்கவோ, வாகனங்களை, கண்மாயில் உள்பகுதியிலோ,வைகை ஆற்றில் இறங்கி தழுவக் கூடாது என எச்சரிக்கை விடுத்தார். ஆனால், பொதுமக்களில் சிலர் ஆபத்து ஏற்படும் என்ற பயமின்றி மதுரை வண்டியூர் கண்மாய் நீர்வரத்து பகுதியில் இறங்கி மீன் பிடித்து வருகின்றனர். ஆபத்து ஏற்படும் முன்னரே இதைத்தடுக்க மதுரை மாவட்ட நிர்வாகவும், காவல்துறையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.