மதுரையில் சிவாஜி மன்றம் சார்பில் பொங்கல் விழா

மதுரையில் சிவாஜி மன்றம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-01-14 05:30 GMT

சிவாஜி மன்றம் சார்பில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொங்கலிட்டு வழிபட்டனர்.

மதுரையில், பொங்கல் விழாவை முன்னிட்டு, சிவாஜி மன்றம் சார்பில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொங்கலிட்டு வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சியில், அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் முருக விலாஸ் கே. நாகராஜன், மற்றும் சிவாஜி மன்ற ஆர். சாமிக்காளை, சுருதி ரமேஷ், மோகன், மணிவேல் உள்ளிட்ட சிவாஜி மன்றத்தினர் பங்கேற்று பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினர். திரளான, சிவாஜி ரசிகர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் முருக விலாஸ் நாகராஜன் ஏற்பாடு செய்திருந்தார். 

Tags:    

Similar News