மதுரையில் காவல்துறை- பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டி
மதுரை மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து தொடங்கிய ஓட்டம், அப்பன் திருப்பதி காவல் நிலையம் வரை நடைபெற்றது;
காவலர் பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் ஓட்டத்தை தொடக்கி வைத்த மதுரை மாவட்ட காவல்காணிப்பாளர் வி. பாஸ்கரன்
மதுரையில் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது
மதுரை மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து தொடங்கிய ஓட்டம், அப்பன் திருப்பதி காவல் நிலையம் வரை சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது.
இந்த மினி மாரத்தான் போட்டியினை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. பாஸ்கரன், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த போட்டியில், சுமார் 150-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஷ் குமார் மற்றும் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில், கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த விளையாட்டு வீரர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 3000, இரண்டாம் பரிசாக ரூபாய் 2000, மூன்றாம் பரிசாக ரூபாய் 1000, மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.