மதுரை அருகே டாஸ்மாக் கடையில் தகராறு: ஒருவர் கொலை

மதுரை ஒத்தக்கடை அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை. கொலையாளிகளை கைது செய்ய உறவினர்கள் முற்றுகை போராட்டம்;

Update: 2021-11-04 12:10 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியில் ராமகிருஷ்ணன் ( வயது 40) மற்றும் மூன்று பேர் சேர்ந்து மது வாங்கி குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில், ராமகிருஷ்ணன் குத்தி கொலை செய்யப்பட்டார்.

கொலையான ராமகிருஷ்ணனின் உறவினர்கள், கொலையாளிகளை கைது செய்யவும், கொலையானவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவலறிந்ததும், போலீஸார் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News