மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்றது;
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், முன்னிலையில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சாலைகள், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி 14 மனுக்களும், வருவாய் பிரிவு தொடர்பாக 8 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 1 மனுவும், இதர கோரிக்கைகள் வேண்டி 2 மனுக்களும் என, மொத்தம் 25 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது. சொத்து வரியில் முகவரி மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரருக்கு முகவரி மாற்றத்திற்கான அனுமதி ஆணையினை, மேயர், ஆணையாளர் ஆகியோர் மனுதாரிடம் வழங்கினார்கள்.
இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன் மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, துணை ஆணையாளர் தயாநிதி உதவி ஆணையாளர் வரலெட்சுமி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.ஸ்ரீகோதை, உதவி செயற் பொறியாளர் காமராஜ், உதவிப்பொறியாளர்கள் கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.