பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த பரவை பேரூராட்சி குழுக்கள் தேர்தல்

மதுரை மாவட்டம், பரவை போரூராட்சி குழுக்கள் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது;

Update: 2022-03-31 16:30 GMT

பரவை பேரூராட்சியில் குழு உறுப்பினர்கள் தேர்தல்  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

மதுரை பரவை பேரூராட்சி நிலைக்குழு மற்றும் வரிவிதிப்பு குழு உறுப்பினர்களாக, அதிமுக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் ,அதிமுக 8 வார்டுகளிலும், திமுகவினர் 6 வார்டுகளிலும்சுயேட்சை - 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், நிலைக்குழு தலைவர்களான, கணக்குகள் குழுதலைவர், பொது சுகாதார குழுத் தலைவர், கல்விக் குழுத் தலைவர், வரி விதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவர், நகரமைப்புக் குழு த் தலைவர் மற்றும் பணிகள் குழுத்தலைவர் ஆகியோருக்கானதேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் ,பரவை பேரூராட்சி மன்ற பணி நியமன குழு உறுப்பினராக, அதிமுக கவுன்சிலர் சௌந்தரபாண்டியன், வரிவிதிப்பு குழு உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கீதா, வின்சி, செபஸ்தி அம்மாள், ரமேஷ் பாண்டி ஆகியோர் முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்தலானது, மதுரை மேற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர சாமி தலைமையில் நடைபெற்றது.

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவு படி பலத்தபோலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற தேர்தலில்  திமுக கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காமல், தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News