மதுரை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்
மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்;
மேல அனுப்பானடியில் கணவன் மனைவி தற்கொலை முயற்சி: கணவன் உயிரிழப்பு :
மதுரை மேல அனுப்பானடி வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஜனார்த்தனன்( 68.). குடும்பப்பிரச்னை காரணமாக இவருடைய மனைவி சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மனமுடைந்த கணவர் ஜனார்த்தனன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மகன் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரில் கீரைத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் ஜனார்த்தனின் தற்கொலைக் கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அருகே வீட்டில் டியூப்லைட் ரிப்பேர் செய்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு:
மதுரை அருகே சிலைமான் அண்ணாநகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கவேலு மகன் சிவராஜ்(23.). இவர் பனையூர் டைமன் சிட்டியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தார் . அங்கு பழுதான டியூப் லைட்டை சரி செய்ய முயன்றார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து அவருடைய தந்தை தங்கவேலு சிலைமான் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் சிவராஜ் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகனா குளத்தில்குடும்ப பிரச்சனையில் தந்தை மகன் மீது தாக்குதல்:உறவினர் கைது:
மதுரை அருகே நாகனாகுளம் ராமகிருஷ்ணன் மகன் ஆனந்த்( 29.). அதே பகுதியைச் சேர்ந்தவர் உறவினர் சசிகுமார்( 41.) இவர்களுக்குள் குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில் ஆனந்தின் மகனை சசிகுமார் அவருடைய சகோதரர் அடைக்கலம் உறவினர் பிரபு, சின்ன அடைக்கலம் ஆகாஷ் ,ஆகிய ஐந்து பேரும் தாக்கியுள்ளனர். இதை ஆனந்த் தட்டி கேட்டார் .இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அவரையும் ஆபாசமாக பேசி தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆனந்த் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து உறவினர் சசிகுமாரை கைது செய்தனர்.
தெப்பக்குளம் அருகேகாரை ஓட்டிச் சென்ற போது நெஞ்சுவலியால் துடித்த டிரைவர் உயிரிழப்பு:
புதுக்கோட்டை சார்லஸ்நகர் வெங்கலப்பிடாரி கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பழனி( 38 ).இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார் .சம்பவத்தன்று தெப்பக்குளம் அருகே கார் ஓட்டிச் சென்றபோது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.இதனால் ஓடிக்கொண்டிருந்த கார் சற்று தூரத்தில் தானாக நின்றது. இதைத்தொடர்ந்து காரில் சென்றவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரி ழந்தார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி அர்ச்சனா தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் பழனியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.