மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி
மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் முன்னே சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானார்.;
மதுரை மாவட்டம், மேலூர் அருகே மணப்பட்டி நான்குவழி சாலையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் முன்னே சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் பெரியசிவல்பட்டியை சேர்ந்த சின்னகருப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், அவரது சகோதரர் சின்னையா மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற மணப்பட்டியை சேர்ந்த நந்தகுமார் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர், வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.