மதுரை அருகே நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா

மதுரையில் நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-06-08 12:23 GMT

மதுரை அருகே நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.

மதுரை யானைமலை ஒத்தக்கடையில், ராஜ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை மற்றும் யானைமலை கிரீன் பவுண்டேசன் சார்பில் அரசுப் பள்ளி ஏழை எளியோர் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழா, ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில், அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற எல்.இ.டி சிலம்பம் சுற்றி அச்சீவ்மெண்ட் விருது பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா, தலைமை ஆசிரியர் தென்னவன் மற்றும் இண்டர்நேஷனல் மாடர்ன் மார்ஷியல் ஆர்ட்ஸ் மதுரை மருது வளரி சங்க ஆசான் முத்துமாரி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இதனைத் தொடர்ந்து, "நமது நிலம், நமது எதிர்காலம்” என்ற இலக்கினை அடையும் வகையில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

அச்சீவ்மெண்ட் விருது பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டி விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், நல்லோர் குழுவினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குழந்தைகள் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News