மதுரை அருகே செட்டிகுளம் ஊராட்சியில் புதிய வணிக வளாகம்: அமைச்சர் திறப்பு

Minister Murthy inaugurates New commercial complex in Chettikulam;

Update: 2022-07-02 08:00 GMT
மதுரை அருகே செட்டிகுளம் ஊராட்சியில் புதிய வணிக வளாகம்: அமைச்சர்  திறப்பு

செட்டிகுளம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகத்தில் திறந்து வைத்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி. உடன் மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் 

  • whatsapp icon

மதுரை மாவட்டம், செட்டிகுளம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் து றையின் சார்பாக ரூர்பன் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை  மக்கள் பயன்பாட்டிற்கு  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கி வைத்தார்.

முன்னதாக, அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி. மூர்த்தி, பொது மக்களுக்கு வழங்கி பேசினார். வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஊராட்சி நிர்வாகிகள், திமுக கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். உடன் ,மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஸ்சேகர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News