மதுரை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழா

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் கோயில்களில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது

Update: 2021-10-06 16:30 GMT

பைல் படம்

மதுரை மாவட்டத்தில், அக். 7.ஆம் தேதி முதல் அக். 14.ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தில் அக். 7-ஆம் தேதி முதல், அக். 14-ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை பொறுப்பில் உள்ள கோயில்களில், வாரத்தில், வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில், நவராத்திரி அலங்காரம் காண அனுமதிக்கப்படவுள்ளனர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், திருவேடகம் ஏடகநாதர், மதுரை சௌபாக்யா விநாயகர், ஆவின் பால விநாயகர், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி, அழகர் கோயில் ஆகிய ஆலயங்களில், நவராத்திரி விழா நடைபெறுகிறது.

Tags:    

Similar News