மதுரை வைகை இலக்கியத் திருவிழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு
மாபெரும் தமிழ் கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது
மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பாக "வைகை இலக்கியத் திருவிழா"நிகழ்ச்சியை, அமைச்சர்களுடன் இணைந்து, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை , புள்ளியியல் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: தமிழ்நாடுஅரசின்,தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவ,மாணவிகளிடையே தமிழர்களின் மரபையும், தமிழின் பெருமிதத் தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, இந்த இனிய நிகழ்ச்சியின் நிகழ்வு மதுரை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
இதன் நோக்கம் நமது தமிழ் மரபின் வளமையையும்,பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளா தார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக இந்த பரப்புரை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ் மரபும் - நாகரிகமும், சமூக நீதி,பெண்கள் மேம்பாடு,சமூகப் பொருளாதார முன்னேற்றம்,மொழி மற்றும் இலக்கியம், கலைம ற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி,தொழில் முனைவுக்கான வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சி ஆகிய தலைப்புகளின் கீழ் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை மாணவ, மாணவியர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, எம். எல். ஏ.க்கள் ,கோ.தளபதி, புதூர் பூமிநாதன், மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன்,பொது நுலகங்களின் இயக்குநர் இளம் பகவத் , மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த்,
மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத்சிங்,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்ஷு நிகம், எழுத்தாளர் பவா செல்லத்துரை மற்றும் பலர் பங்கேற்றனர்.