மதுரை அருகே இயற்கை நடைபயணத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள்
மதுரை அருகே இடையப்பட்டி கிராமத்தில், அமைச்சர்கள் பி.மூர்த்தி, மா.மதிவேந்தன் ஆகியோர் இயற்கை நடைபயணத்தை தொடக்கி வைத்தனர்;
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி இடையப்பட்டி கிராமத்தில்,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் ஆகியோர் சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளை முன்னிட்டு இயற்கை நடை பயணத்தை தொடங்கி வைத்து பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி இடையப்பட்டி கிராமத்தில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் ஆகியோர் சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளை முன்னிட்டு இயற்கை நடை பயணத்தை தொடங்கி வைத்து பங்கேற்றனர்.
இது குறித்து வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் கூறியதாவது: மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியம், இடையபட்டி மற்றும் மேலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளிமலை ஆண்டவர் கோவில் பகுதிகளில் நாளை சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு வனத்துறை ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் இருக்கிற பாரம்பரிய பல்லுயிர் இடங்களில் சில நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.
அதனையொட்டி, இவ்வருடம் இடையபட்டியை தேர்வு செய்து இங்கு இருக்கிற கடம்பவன பகுதியில் பல்வேறு பல்லுயிர்கள் இங்கு இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை மக்கள் அறிகின்ற வகையில் இங்கு நடை பயணம் மேற்கொண்டுள்ளோம். இங்கு பல்வேறு மரங்கள், பல்வேறு மூலிகை செடிகள், பல்வேறு பறவைகள், பூச்சிகள், தேவாங்கு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வசிக்கும் பகுதியாக இருக்கிறது.
தமிழ்நாட்டிலேயே சமவெளி காடுகளில் கடம்பவனம் என்பது குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கிறது. இந்த பகுதிகளில் கடம்ப மரம் மட்டுமல்லாது, உசிலை, குருந்தம், நெய், குருந்தம், குறிச்சி, அழிஞ்சல் மற்றும் பூவந்தி போன்ற மரங்களும் இருக்கிறது. இதுமட்டுமல்லாது, மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளும், தேவாங்கு,முள்எலி, எறும்பு திண்ணி, புள்ளிமான் மற்றும் காட்டு பன்றி உள்ளிட்ட அறியவகை உயிரினங்களும் இங்கு இருக்கின்றன
அதனால் ,இப்பகுதியை பாதுகாக்க வேண்டும். காலநிலை மாற்றத்தைக் கருதியும், தற்போதைய வளர்ச்சியை கருதியும் எக்காரணத்தை கொண்டும் இங்கு உள்ள காட்டுப்பகுதிகள் அழிந்துவிடாமல், இங்குள்ள பல்லுயிர்கள் பேணிபாதுகாக்கப் பட வேண்டும். அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பொதுமக்களுடன் இணைந்து 1 மணிநேரம் நடை பயணம் மேற்கொண்டோம்.
தமிழ்நாடு முதலமைச்சர், வனங்கள், நீர் ஆதாரங்கள், நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், பசுமை தமிழ்நாடு இயக்கம், ஈரநில இயக்கம் போன்ற இயக்கங்களை உருவாக்கி பல்வேறு இடங்களை பாதுகாத்து வருகிறார்கள். தமிழ்நாடு வனத்துறை சார்பாக அரிட்டாபட்டி என்கிற ஊரை முதன்முறையாக பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவித்துள்ளோம். மேலும், பல்வேறு இடங்களை கண்டறிந்து வருகிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த இயற்கை நடையை தொடங்கிவைத்து அமைச்சர்கள், அலுவலர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் இயற்கை நடைபயணம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கேசன், வன பாதுகாவலர்கள் சேகர் குமார் நிராஜ் , பத்மாவதி, தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.