மதுரை அருகே புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர் மூர்த்தி
Minister Murthy inaugurated a new ration shop;
மதுரை அருகே அரசு நியாய விலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது.
மதுரை அருகேசெட்டிகுளம் ஊராட்சியில், புதிய நியாய விலைக் கடையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். .இப்பகுதி மக்கள் தாங்கள் பகுதிக்கு ரேஷன் கடை அமைக்க கோரியிருந்தனர். இதையடுத்து, அமைச்சர் ஏற்பாட்டில் இந்த கடையானது திறக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஸ்சேகர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.