மதுரை அருகே மழையால் சேதமடைந்த பகுதிகளில் அமைச்சர் ஆய்வு
கள்ளந்திரி பகுதிகளில் கனமழையினால் சேதடைந்த வீடுகள் மற்றும் மின்கம்பங்களை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்
கள்ளந்திரி பகுதிகளில் கனமழையினால் சேதடைந்த வீடுகள் மற்றும் மின்கம்பங்களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பி. மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளந்திரி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக சேதமடைந்த வீடுகள் மற்றும் மின்கம்பங்களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வு செய்த பின்னர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது: மதுரை மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், கிராமப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்துள்ள மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு சரிசெய்வதற்கு தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில், கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக குடிநீர் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஊராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த்துறையின் மூலமாக கனமழையினால் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுப்பு செய்து நிவாரண நிதி வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளந்திரியில் கனமழையினால் பகுதி சேதடைந்த 7 வீடுகளுக்கு வருவாய்த்துறையின் மூலமாக தலா ரூ.4,100/- நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களை தற்காலிகமாக சமுதாயக் கூடங்களில் தங்க வைத்து அடிப்படைத் தேவைகளான உணவு, குடிநீர் வழங்குவதற்கும், மதுரை மாவட்டம் முழுவதும் மழையினால் சேதமடைந்த பகுதிகளை கணக்கெடுப்பு செய்து நிவாரணப் பணி மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் , மாவட்ட வருவாய் அலுவலர் தர.சக்திவேல் அவர்கள், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மணிமேகலை , வருவாய் கோட்டாட்சியர் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் பங்கேற்றனர்.