சோழவந்தான் பகுதியில் எம்.ஜி.ஆர். நினைவு நாள்: அதிமுகவினர் அஞ்சலி
எம்ஜிஆர் 34- ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி கிராமங்களில் எம்ஜிஆர் உருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்;
சோழவந்தான் பகுதிகளில் எம்.ஜி.ஆர். நினைவு நாளை அதிமுகவினர் அனுசரித்தனர்.
சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு, அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், கழகம் கிளைக் கழகம் நிர்வாகிகள் ராஜேந்திரன், பழனியாண்டி, ஈஸ்வரன்,செந்தில்குமார் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
சோழவந்தான் கடைவீதியில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம்.கே.முருகேசன் மற்றும் இங்குள்ள வார்டுகளில் அதிமுகவினர் எம்ஜிஆர் திருவுருவப் படத்தை வைத்து மாலை அணிவித்தனர். மன்னாடிமங்கலம் கிராமத்தில் பேரவைச்செயலாளர் ராஜபாண்டி, தச்சம்பத்து கிராமத்தில் முருகன், தேனூரில் பாஸ்கரன், கொடிமங்கலத்தில் கருப்பணன்,துவரிமானில் ராஜேந்திரன் ஆகியோர் அந்தந்த கிராமத்தில் எம்ஜிஆர் திருவுருவப் படத்தை வைத்து மாலை அணிவித்தனர். இதில், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.