மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஐப்பசி கோலாட்டா உற்சவம்

ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம் கடந்த நவ. 4 -ஆம் தேதி துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது

Update: 2021-11-09 10:45 GMT

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம்,  5 -ஆம் நாளான இன்று அம்மன் கோ ரதத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். அதில், ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம் கடந்த நவ. 4 -ஆம் தேதி துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. மீனாட்சி அம்மன் கோலாட்டம் ஆடும் திருக்கோலத்தில் எழுந்தருளி கோலாட்ட உற்சவ நாட்களில் தினமும் மாலை அம்மன், ஆடி வீதியில் எழுந்தருளி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிபார். மேலும், திருவிழாவின் 5 -ஆம் நாளான இன்று அம்மன் கோ ரதத்தில் நான்கு ஆடி வீதிகளில் வலம் வந்து கொலுசாவடியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து, நாளை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர்.

Tags:    

Similar News