பெண்ணுக்கு முகநூல் பக்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
மதுரை அருகே ஒத்தக்கடையில் பெண் ஒருவருக்கு போலியான முகவரியை உருவாக்கி அதன் மூலம் தொல்லை கொடுத்த ஆவடி இளைஞர் கைது;
மதுரை அருகே பெண் ஒருவருக்கு முகநூல் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
மதுரை அருகே ஒத்தக்கடையில் பெண் ஒருவருக்கு போலியான முகவரியை உருவாக்கி அதன் மூலம் தொல்லை கொடுத்து வந்த ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சென்னை ஆவடியை சேர்ந்தவர் குமார் இவர் போலியான முகவரியை உருவாக்கி மதுரை அருகே ஒத்தக்கடை சேர்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அச்சுறுத்தி வந்தார்.பெண் அளித்த புகாரின் பேரில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் உத்தரவின்பேரில், சார்மிங் ஒய்ஸிலின் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு முகநூல் பக்கத்தின் மூலம் தொல்லை கொடுத்து வந்த குமாரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.