மதுரை வைகை ஆற்றில் வெள்ள அபாயம்: ஆட்சியர் எச்சரிக்கை

பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்காக வைகை ஆற்றில் மற்றும் ஓடைகளில் இறங்க கூடாது

Update: 2021-11-26 05:15 GMT

மதுரை சிம்மக்கல் அருகிலுள்ள வைகை பாலத்தின் கீழே புரண்டோடும் தண்ணீர்

வைகையில் வெள்ளம்: பொது மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகிழக்கு பருவ மழையினால், வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக மழை பெய்து வருவதால் மதுரை வைகை ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்து வருகிறது. எனவே, வைகை ஆற்றில் இறங்கும் நபர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்காக வைகை ஆற்றில் மற்றும் ஓடைகளில் இறங்க கூடாது என  மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஸ் சேகர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News