மதுரை அருகே கண்மாயில் வீணாகும் மழைநீர்:தடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை

பொதுப்பணிதுறையினர் சீரமைப்பு பணியினை முறையாக மேற்கொள்ளாமல், காலம் தாழ்த்தியதன் காரணமாக கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்

Update: 2021-07-09 20:25 GMT

மதுரை அருகே பேராக்கூர் பெரிய கண்மாயில் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரை அருகே பேராக்கூர் கிராமத்தில் சுமார் 460 ஏக்கர் பாசன வசதி பெறும் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் மதகு சரி செய்யும் பணிக்காக கண்மாயில் கரை பகுதிகள் அகற்றப்பட்டு தற்காலிகமாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று பெய்த கனமழையால் கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்து கரையில் உடைப்பு ஏற்பட்டு கண்மாய் நீர் முழுவதும் வீணாகி வருகிறது.

இதனால், கண்மாயை ஒட்டிய பகுதியில் உள்ள நெல் நாற்றங்கால் பயிர் உள்ளிட்டவைகளை மூழ்கி குளம் போல் காணப்படுகிறது. பொதுப்பணிதுறையினர் சீரமைப்பு பணியினை முறையாக மேற்கொள்ளாமல், காலம் தாழ்த்தியதன் காரணமாக கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, கண்மாய் உடைப்பை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது விரைவில் உடைப்பு சரி செய்யபட்டு மதகு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News