தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு மாணவர்கள் வரவேற்பு
குடியரசுத்தலைவரிடம் விருது பெற்ற அலங்காநல்லூர் பள்ளி ஆசிரியருக்கு மாணவர்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது;
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற அலங்காநல்லூர் பள்ளி ஆசிரியருக்கு வரவேற்பு:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு ஆசிரியர் காட் வின் வேதநாயகம்ராஜ்குமாருக்கு, தேசிய நல்லாசிரியருக்கான விருதும் சான்றிதழும் குடியரசுத்தலைவர் முர்மு வழங்கினார்.
இதையடுத்து ஆசிரியர் காட்வின், முதன்முதலாக அலங்காநல்லூர் பள்ளிக்கு வந்தார். அவருக்கு பள்ளி மாணவர்கள் சார்பாக, மாடு, மயில், ஆட்டத்துடன், மேளதாளம் முழங்க கேட்டுக் கடை பகுதியில் இருந்து உற்சாகத்தோடு ஊர்வலமாக பஸ் நிலையம் வழியாக பள்ளிக்குஅழைத்து செல்லப்பட்டார்.அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்யாண முத்தையா மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
மதுரை போன்ற நகரங்களில் கூட்டு நிதி திரட்டலை மேம்படுத்தும் மிலாப்
தனிநபர்கள் மற்றும் சமூக காரணங்களுக்காக இந்தியாவின் முதல் பூஜ்ஜியக் கட்டண கூட்டு நிதிதிரட்டல் தளமான “மிலாப்”, குறிப்பாக மதுரை மாதிரியான இரண்டாம் நிலை நகரங்களில், மருத்துவ உதவிகளுக்காக போராடும் தனிநபர்களுக்கு முக்கியமான நிதி உதவி வழங்குவதன் மூலம் எப்படியெல்லாம் நிதி திரட்டலானது கைகொடுக்கும் என்பது குறித்து மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மிலாப் தலைவரும் இணை நிறுவனருமான அனோஜ் விஸ்வநாதன் கலந்துரையாடினார்.
அனோஜ் விஸ்வநாதன் பேசுகையில், மிலாப் நிறுவனமானது பல ஆண்டுகளாக உயிருக்கு ஆபத்தான நிலைமையிலும் கூட, சிகிச்சையின் போது அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதன் மூலம் தனிநபரின் வாழ்க்கையை, குறிப்பாக குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதில் சிறப்புக்குரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவசர மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நீண்ட கால பராமரிப்புக்கான நம்பகமான நிதி திரட்டும் தளமான மிலாப் நிறுவனத்துடன் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இணைப்பதில், கூட்டு நிதி சேர்க்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மருத்துவமனை மருத்துவர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
மிலாப்பின் நன்கொடையாளர்களின் உதவியானது உலகம் முழுவதிலும் உள்ள 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகிறது, மேலும் இந்தியா முழுவதும் 809,000+ திட்டங்களுக்கு ரூ.2300 கோடிக்கு மேல் பங்களித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில், இந்தியாவில் மக்கள் தங்கள் நேசத்துக்குரிய காரணங்களுக்காக நிதி திரட்டவும் பங்களிக்கவும் விரும்பும் தளமாக மிலாப் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.