தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டம்: ஆட்சியர் ஆய்வு

மதுரை அருகே தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்.;

Update: 2021-07-02 04:29 GMT

மேலூர் அருகே தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் நேரில் ஆய்வு.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு இயக்கம் சார்பில், தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்து, மதுரை மாவட்ட ஆட்சிய அனிஷ்சேகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனையொட்டி, மேலூர் அழகர்கோவில் அருகே சுந்தராஜன்பட்டியில் இத் திட்டன் கீழ், மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார், இதனைத்தொடர்ந்து, கிடாரிப்பட்டி பகுதியில் மூங்கில் கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டு தொழாலாளர்களிடம் கேட்டறிந்தார், இந்த ஆய்வின் போது, துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News