சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக தரம் உயர்த்தப்பட்டது மதுரை மீனாட்சி மருத்துவமனை

மதுரை மீனாட்சி மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

Update: 2024-07-14 07:06 GMT

மதுரை மீனாட்சி மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

உலகத்தரத்தில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் 350 படுக்கை வசதி கொண்ட மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை துவங்கப்பட்டு உள்ளது.

மதுரை போன்ற இரண்டாம் நிலை நகரத்தில் உலகளவில் உயர் மருத்துவமனைகளுக்கு நிகரான சேவையையும், சொகுசு வசதியையும் வழங்குவதும் மற்றும் அனைத்து சமூக-பொருளாதார பின்புலங்களை சேர்ந்த மக்களுக்கு மிக நேர்த்தியான சேவையை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.

நோயாளிகளின் அனுபவத்தை இனிதாக மேம்படுத்தும் நோக்கத்துடன் அனைத்து வசதிகளுடன் விசாலமான அறைகள் உலகளவில் சிறந்த மருத்துவமனைகளின் தரநிலைக்கு நிகராக வடிவமைக்கப்பட்டிருப்பது இம்மருத்துவமனையின் உட்கட்டமைப்பின் நேர்த்திக்கு சான்றாகும்.

கோயில் நகரமான மதுரை மாநகரில் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (MSSH) இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 50 சிறப்பு பிரிவுகளில் நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்களும், செவிலியர்களும் மற்றும் பிற தொழில்நுட்ப பணியாளர்களும் செயலாற்றும் இம்மருத்துவமனையில் 350 படுக்கை வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. அதிநவீன மருத்துவ தொழில்

நுட்ப வசதிகள் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கும் இம்மருத்துவமனை, சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களுக்கு உலகளவில் பிரீமியம் தரத்தில் சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்குவது மீது தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.

மிக விமரிசையாக நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவில், இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுல், பங்கேற்று மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் பி. ராஜேந்திரன், தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர், துணைத்தலைவர் காமினி குருசங்கர் மற்றும்மருத்துவ இயக்குநர் டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

370,000 சதுர அடி என்ற மிகப்பெரிய நிலப்பரப்பில் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது. மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்திற்கு அடுத்த இடத்தில் ஒன்பது தளங்களை கொண்ட கட்டிடமாக மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (MSSH) உருவாக் கப்பட்டிருக்கிறது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டுமன்றி நாடெங்கிலும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் நோயாளிகளுக்கு பிரீமியம் தரத்தில் மருத்துவ சேவைகளை இது வழங்கும்.

இது தொடர்பாக டாக்டர். குருசங்கர் கூறியதாவது:-

இப்புதிய மருத்துவமனை நேர்த்தியான சிகிச்சையை பிரீமியம் வசதிகளுடன் உலகளாவிய உயர் தொழில்நுட்ப உதவியுடன் உலகத் தரத்திலான நிபுணத் துவத்துடன் வழங்கும் இவை, அனைத்தும் குறைவான கட்டணங் களுடன் வழங்கப்படும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை நேர்த்தியை சிறப்பான சொகுசு வசதியுடன் மதுரை போன்ற இரண்டாம் நிலை நகரத்தில் அறிமுகம் செய்வது எமது நோக்கமாகும். இந்த மருத்துவமனையின் உட்கட்டமைப்பு, நோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் விசாலமான மற்றும் இடப்பரப்புடன் கூடிய அறைகளோடு உலகத்தரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

நவீன தொழில் நுட்பம், நேர்த்தியான உட்கட்டமைப்பு வசதி மற்றும் மருத்துவ நிபுணத்துவம் ஆகியவற்றில் இம்மருத்துவமனை மிகச்சிறப்பான மருத்துவமனையாக சேவைகளை வழங்கும். இவற்றுள் சில வசதிகள் தமிழ்நாட்டில் இங்குதான் முன்னோடித்துவமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலா மையமாக மதுரை மாநகரம் இருந்துவரும் நிலையில், மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கப்பட்டிருப்பது மருத்துவ சுற்றுலாவிற்கும், கூடுதல் உத்வேகமளித்து வருகையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் என நாங்கள் நம்புகிறோம். இம்மருத்துவமனை, தகுதியும் அனுபவமுமிக்க மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு, உயர்நேர்த்தியான சிகிச்சை நோயாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில், “இதய சிகிச்சை, உயர் துல்லியமிக்க புற்றுநோய் கண்டறிதல் சிகிச்சை மற்றும், உறுப்புமாற்று சிகிச்சை, மேம்பட்ட நரம்பியல் மற்றும் வலிப்புத்தாக்கத்திற்கான சிகிச்சை, நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கான சிகிச்சை, கல்லீரல் மற்றும் பல்வேறு சிறப்பு பிரிவுகள் மற்றும் பித்தநீர் நோய்களுக்கான சிகிச்சை, குறைவான ஊடுருவல் கொண்ட சிகிச்சை மற்றும் ரோபோடிக் அறுவைசிகிச்சை, எலும்பு மற்றும் மூட்டு நோய்களுக்கான சிகிச்சை, நுரையீரல் நோய்களுக்கான சிகிச்சை , இயன்முறை மருத்துவம் மற்றும் மறுவாழ்வு, முதுகுத்தண்டு கோளாறுகளுக்கு, சிகிச்சை, மூலக்கூறு கண்டறிதல்கள், மருத்துவ இமேஜிங் சேவைகள், இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சியல் ஆகியவை உட்பட பல்வேறு சிறப்பு பிரிவுகள் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகளில் முதன்மையான மருத்துவ நிபுணர்களை கொண்டிருக்கும் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மிக சமீபத்திய மருத்துவ தொழில் நுட்பத்தை சிகிச்சை நிபுணத் துவத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம் சுகாதார சேவைகளை மிக நேர்த்தியாக வழங்குவதை இம் மருத்துவமனை தனது நோக்கமாக கொண் டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

கூடுதலாக, அன்னையர் நலம் மற்றும் வளர்க்கரு மருத்துவ சேவைகளோடு, குழந்தைகளுக்கான துணைப் பிரிவுகளில் சிகிச்சையை வழங்கும் குழந்தைகள் மருத்துவமனை என்ற சிறப்பு பிரிவும் இப்புதிய மருத் துவமனையில் இடம்பெறுகிறது. சிறார்களுக்கான இதயவியல் சிகிச்சை, சிறார்களுக்கான இதய அறுவைசிகிச்சை மற்றும் உறுப்புமாற்று சிகிச்சை, வாத நோய், உட்சுரப்பியல், நுரையீரலியல், நரம்பு அறிவியல், சிறார்களுக்கான மரபணுவியல், குடல்இரைப்பை அறுவை சிகிச்சையியல், சிறார்களுக்கான எலும்பு முறிவு சிகிச்சைகள் மற்றும் சிறார்கள் மற்றும் வளர்க்கருக்களுக்கு அறுவைசிகிச்சை ஆகியவை உட்பட குழந்தைகளுக்கான அனைத்து துணை சிறப்பு பிரிவுகளிலும் சிகிச்சைகள் இங்கு வழங்கப்படும் என்றார்.

Tags:    

Similar News