மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மேயர், ஆணையாளர் ஆய்வு
மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்;
மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயர் இந்திராணி
மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில், மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில், தினந்தோறும் உள்ளுர் மற்றும் வெளியூர் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்விளக்கு வசதி, மழைநீர் வடிகால் வசதி, பேருந்துகள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழிகள் , நடைபாதை வசதிகள் வாகன பாதுகாப்பு, பொருள்கள் பாதுகாப்பு அறை , தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, தூய்மை பணிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து தினந்தோறும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகள் குறித்து மேயர், ஆணையாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து , எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நலவாழ்வு மையத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.
முன்னதாக, மண்டலம் 3 வார்டு எண்.61 எஸ்.எஸ்.காலனி சித்தாலாட்சி நகர் பகுதியில் பாதாளச் சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்யும் பணிகளை, மேயர், ஆணையாளர் பார்வையிட்டு அடைப்பு பணிகளை விரைந்து சரிசெய்யுமாறும் மற்றும் நிரந்தர தீர்வு காணும் வகையில் பணிகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மேயர் அவர்கள் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, நகரப் பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு.வினோத் குமார், உதவி ஆணையாளர்கள் வரலெட்சுமி, மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர்கள் (திட்டம்) சுப்புத்தாய், காமராஜ் உதவி செயற்பொறியாளர் சேகர் , உதவிப்பொறியாளர் பொன்மணி, சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் நல்லுச்சாமி , மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.