மதுரையில் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

கனிணி உள்பட பல்வேறு பொருள்கள் மீட்பு

Update: 2021-09-03 17:39 GMT

மதுரை மாவட்டத்தில் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

மதுரை மாவட்டத்தில் திருட்டு , கொள்ளை , வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் , உத்தரவின் பேரில் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது .  உசிலம்பட்டி உட்கோட்ட தனிப்படையினரின் முயற்சியினால், உசிலம்பட்டி, நகர் காவல் நிலையத்தில் தாக்கலான 4 கள்ளக்களவு வழக்குகளில், ஈடுபட்டதாக நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்ததாக செந்தில்குமார்  என்பவரை  கைது செய்து , மேற்படி வழக்குகளில் களவு போன பொருட்களான, கம்ப்யூட்டர் மானிட்டர் -6 , சி.பி.யூ -6 , கேமரா -1 ஆகியவை  பறிமுதல்  செய்யப்பட்டது .

இந்த வழக்குகளில் குற்றவாளியை   கண்டுபிடித்த, உட்கோட்ட தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். மேலும் , மதுரை மாவட்டத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன்  எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News