எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை துரிதப்படுத்த நீதிபதிகள் அறிவுரை
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.;
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 36 மாதங்களுக்குள் கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் பிற மாநிலங்களில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளது
தமிழகத்தில் பணிகள் அவ்வளவு துரிதமாக நடைபெற்றதாக தெரியவில்லை - உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். எய்ம்ஸ் பணி தொடர்பான ஒவ்வொரு நகர்வுக்கும் மனுதாரர் நீதிமன்றத்தை நாடியே ஆணை பெற்றுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல், எய்ம்ஸ் பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.