Madurai District Crime News மதுரை மாவட்ட கிரைம் செய்திகள்: போலீஸார் விசாரணை

Madurai District Crime News மதுரை மற்றும் மாவட்டத்தில் நடந்த முக்கிய செய்திகள் குறித்து பார்ப்போம்....

Update: 2023-11-07 09:41 GMT

Madurai District Crime News

சட்ட விரோதமாக மதுவிற்பனை:மூன்று பேர் கைது

மதிச்சியம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வைரக்குமார். இவர், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். போலீசார் ஜெகஜீவன் ராம் தெருவில் சென்றபோது, மது பாட்டிலை உடைத்து சில்லறைவிற்பனையாக பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றி மூன்று பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சோலையழகுபுரம் சோனைமுத்து மகன் மாரிமுத்து( 25,). சோலையழகுபுரம் ராமமூர்த்திநகர் முதல் தெரு மணவாளன் (43),

ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு இரண்டாவது தெரு வாசுதேவன்( 49) என்று தெரிந்தது. அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அனுமதியின்றி பட்டாசு  விற்றவர் கைது 

மதுரை, சுப்பிரமணியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன். இவர் ,போலீசாருடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.இவர், திருவள்ளுவர் மெயின் ரோடு பகுதியில் சென்றபோது, அனுமதி பெறாமல் ஆபத்தை விளைவிக்கும் விதமாக ஒருவர் கடையில் வைத்து பட்டாசு விற்பனை செய்து கொண்டிருந்தார்.அவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது, அவர் சேகரன் (56). என்று தெரிந்தது. அவரை கைது செய்து அவர் விற்பனை செய்த பட்டாசுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

முன் விரோதத்தில் உறவினர்களுக்குள் மோதல் :3 பேர் கைது 

திருப்பரங்குன்றத்தில் முன் விரோதத்தில் உறவினர்கள் மோதிக்கொண்டதில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் கீழத்தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி மகன் மணிகண்டன் (25) .அதேபகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராமகிருஷ்ணன் (22) .திருப்பரங்குன்றம் கோட்டை தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் குணசேகரன்( 25.) இவர்கள் உறவினர்கள் ஆவார்கள் .மூன்று மாதத்திற்கு முன்பு இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால், முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று பெரியரத வீதியில் சென்று கொண்டிருந்த மணிகண்டனை, ராமகிருஷ்ணன், குணசேகரன் இருவரும் ஆபாசமாக பேசி ,கீழே தள்ளி தாக்கினர் .இதில், மணிகண்டனுக்கு தலையில் பலமாக அடிபட்டது. இது குறித்து, மணிகண்டன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, ராமகிருஷ்ணனையும், குணசேகரனையும் கைது செய்தனர். இந்த மோதல் குறித்து, குணசேகரன் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.

Tags:    

Similar News