மதுரை மாநகராட்சி திமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

திமுக வேட்பாளர் தாய்.முரளிகணேசுக்கு கூட்டணி கட்சியான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்

Update: 2022-02-13 09:15 GMT

மாநகராட்சி 25வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாய்.முரளிகணேசுக்கு வரவேற்பளித்த கூட்டணி கட்சியினர் 

மதுரை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக உட்பட அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி 25வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாய்.முரளிகணேசுக்கு கூட்டணி கட்சியான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். திமுக அண்ணாதுரை, பாலா, பாலன், காங்கிரஸ் மருத நாயகம், பால்ராஜ், மீனாட்சி சுந்தரம், சிபிஐ கட்சி கணேசன்,  சிபிஎம் கட்சி முத்து உட்பட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News