அலங்காநல்லூர் அருகே எம் உசிலம்பட்டி முத்தையாசாமி கோயில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர் அருகே எம் உசிலம்பட்டி முத்தையாசாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2024-09-17 10:30 GMT

மதுரை அலங்கா நல்லூர் எம் உசிலம்பட்டி முத்தையா சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

66.எம்.உசிலம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ வளநாட்டு முத்தையா சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு அருகே 66.எம். உசிலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வளநாட்டு முத்தையா சுவாமி, சின்னம்மாள் சுவாமி, சின்ன கருப்புசாமி, ஆண்டிசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், மங்கள இசை முழங்க விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜை, கணபதி ஹோமம்,கிராம தெய்வங்களுக்கு கனிவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து, மூன்று கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் பூசாரி ஆண்டிச்சாமி மற்றும் முத்தையா சுவாமி கோவில் பங்காளிகள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News