மலையிலிருந்து புறப்பட்டு துரைக்கு வந்த கள்ளழகர்: பக்தர்கள் பரவசம்
சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதற்காக கள்ளழகர் அழகர், மலையிலிருந்து புறப்பட்டார்.
சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதற்காக கள்ளழகர் அழகர், மலையிலிருந்து புறப்பட்டார்.
அவர் ,மதுரை தல்லாகுளத்தில் திங்கள் இரவு எதிர் சேர்வை நடைபெறும். அதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை மதுரை வைகை ஆற்றில் அலை இறங்குகிறார். இதற்காக, மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பும், பந்தல்களம் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் வசதிக்காக, வைகை ஆற்றில் தண்ணீர் திறந்த பட்டுள்ளது. விழா ஒட்டி, மதுரை நகரம் விழா கோலம் பூண்டுள்ளது. கள்ளழகரை வரவேற்க மதுரை மக்கள் தயாராகிவிட்டனர்.
இதே போல மதுரை மாவட்டம் சோழவந்தானில் வைகை ஆற்றில் ஜனநாராயணப் பெருமாள் கள்ளழகர் திருக்கோவில் இறங்குகிறார். மற்றும் அணைப்பட்டி கிராமத்தில் அழகர் இறங்கி பக்தருக்கு காட்சி அளிக்கிறார். இதை ஒட்டி கிராமங்கள், விழாக்கோலங்கள் பூண்டுள்ளது.
மதுரையில், புதூரில், பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அடுத்து மின்சார வாரியம் தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.