மதுரையில் கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி: விடியும் வரை பக்தர்கள் தரிசனம்
மதுரை ராமராயர் மண்டபத்தில் கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது.;
மதுரை ராமராயர் மண்டபத்தில் கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி
மதுரை ராமராயர் மண்டபத்தில் கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது.
மதுரை வைகையாற்றில் அருகிலுள்ள ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பல்வேறு திருக்கண்களுக்கு சென்று, வண்டியூரில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் கொடுத்துவிட்டு, மீண்டும் ,வண்டியூர், அண்ணாநகர், தாசில்தார் நகர், வழியாக ராமராயர் மண்டபத்திக்கு வந்தடைந்தார். அங்கு ,கள்ளழகர் மச்சம், கூர்மம் வாமனன் ,மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதை, விடிய விடிய பக்தர்கள் தரிசித்து சென்றனர் . மதுரையில், மழை பெய்தாலும், பக்தர்கள் அதை பொருட்படுத்தாது கள்ளழகரை தரிசித்தனர்.