மதுரை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை: மர்ம கும்பல் கைவரிசை

வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் நகை, பணம் கொள்ளை. 4 பேர் கொண்ட மர்மகும்பலை 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்

Update: 2022-01-06 13:34 GMT

மர்ம நபர்களால் பீராே உடைக்கப்பட்டு பாெருட்கள் சிதறி கிடக்கின்றன.

வீட்டின் பூட்டை உடைத்து, ஒரு வயது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 75 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை. 4 பேர் கொண்ட மர்மகும்பலை 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவரும் காவல்துறையினர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சத்தியபுரத்தை சேர்ந்தவர் கோபி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் தற்போது சத்தியபுரத்தில் தனது தாய் இந்திரா, மனைவி கவுசல்யா ஒரு வயது மகன் யுவா ஆகியோருடன் தங்களுடைய வீட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல், தாய் இந்திரா, சகோதரி இந்து மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஒரு அறையிலும், கோபி அவரது மனைவி கவுசல்யா மற்றும் மகன் யுவா ஆகியோர் ஒரு அறையிலும் உறங்கி கொண்டிருந்த போது, மாஸ்க் அணிந்திருந்த 30 வயது மதிக்கத்தக்க 4 பேர் கொண்ட மர்மகும்பல் அவர்களது வீட்டின் முன்புற கிரில் மற்றும் மரக்கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே புகுந்து இந்திரா, அவரது மகள் இந்து, மற்றும் இந்துவின் குழந்தைகள் இருந்த அறையை பூட்டிவிட்டு, அருகில் கோபி படுத்திருந்த அறைக்கு சென்று அரிவாள், கத்தி, திருப்புலி, உள்ளிட்ட ஆயுதங்களால் கோபி, மற்றும் அவரது மனைவி கவுசல்யாவை தாக்கி மிரட்டி உள்ளனர். இதில் அவர்களது அலறல் சப்தம் கேட்கவே மற்றொரு அறையில் இருந்த இந்திரா கதவை திறக்க முயற்சி செய்தபோது, அறை திறக்க முடியாததால் சப்தம் போட்டுள்ளார்.

இதனால் கோபி, மனைவி கவுசல்யா, மகன் யுவாவையும் இந்திரா இருந்த அறைக்கு அழைத்து சென்று, அங்கு கோபியின் மகன் யுவாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த நகை, மற்றும் 3 பீரோவில் வைத்திருந்த நகை, பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அவர்கள் அனைவரையும் ஒரே அறையில் வைத்து பூட்டி விட்டு தப்பியோடி உள்ளனர். இதனைத்தொடர்ந்து இவர்கள் அறையில் இருந்த ஜன்னல் வழியாக அருகில் இருந்தவர்களை அழைத்த நிலையில், அவர்கள் வந்து இவர்களை மீட்டு இதுகுறித்து மேலூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான காவல்துறையினர், தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்தில் தனிப்படை காவல்துறை ஆய்வாளர் ஆனந்த் மற்றும் தடவியல் சார்பு ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் தடயங்களை சேகரித்து 3 தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலூர் அருகே நடைபெற்ற இக்காெள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News