குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

மதுரை குரூப் 4 டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு வழக்கை, சிபி சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-12-15 04:30 GMT

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெற்ற குரூப் ஒரு தெருவின் முடிவுகள் வெளியானபோது ராமேஸ்வரம் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் இடம் பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில். வழக்கை சிபிஐ விசாரித்தால் முறைகேடு தொடர்பாக கண்டறிய இயலும் என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமதுரஸ்வி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா, சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும் சிபிசிஐடி காவல்துறையினர்,  தங்கள் வசம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சிபிஐ காவல்துறையினர் நேர்மையாகவும் விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

Similar News