மதுரை அருகே சிறுமியை திருமணம் செய்த மணமகன் கைது

சிறுமிக்கு திருமணம் நடப்பதாக திருப்பரங்குன்றம் குழந்தைகள் நல அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது;

Update: 2021-11-11 09:30 GMT

பைல் படம்

மதுரை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த மணமகனை போலீசார் கைது செய்தனர் .

மதுரை அருகே கல்லம்பலில் உள்ள ஒரு திருமண மஹாலில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடப்பதாக  திருப்பரங்குன்றம் குழந்தைகள் நல அலுவலர் யோகம்மாளுக்கு   ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, அவர் சம்பந்தப்பட்ட மஹாலுக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, அங்கு 16 வயது சிறுமிக்கும்  23 வயதுள்ள பிரதீப் குமார் என்ற இளைஞருக்கும்  திருமணம் நடந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சிலைமான் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை திருமணம் செய்த மணமகன்  பிரதீப்குமாரை கைது செய்தனர். மேலும், இந்த திருமணத்திற்கு உடந்தையாக இருந்த மணமகனின் தந்தை பாண்டிசாமி, உறவினர் ஜெயராமன், முத்துலட்சுமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News