பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர் போராட்டம்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மாநிலத் தலைவர் ஆரோக்கியதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்;
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மாநிலத் தலைவர் ஆரோக்கியதாஸ்
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வில்லை என்றால் அனைத்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை, மாநிலத் தலைவர் ஆரோக்கியதாஸ்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, 2021- சட்டமன்ற பொது தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதோடு சட்டமன்ற பொது தேர்தலில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆதரவு தர வேண்டும்.
ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்க அமைப்பினர் ஆதரவளித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க காரணமாக இருந்தோம். ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியம். நடைமுறைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அடைந்தோம்.
சட்டமன்ற கூட்டத்தில், தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை என தவறான, பொருந்தாத காரணத்தை சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் பேசி வருகிறார்.இதற்கு தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.இல்லையென்றால் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பினை ஒன்றிணைத்து போராட்டத்தை முன்னெடுப்போம் என கூறினார்.