மதுரை அருகே அரசு நியாய விலைக்கடை: அமைச்சர் திறப்பு

தரமான பொருட்கள் நகர்ப்புற, கிராமப்புற நுகர்வோருக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதே நோக்கம்;

Update: 2023-07-30 10:30 GMT

மதுரை அருகே ரேஷன் கடையை, திறந்து வைத்த அமைச்சர் மூர்த்தி.

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், தெற்கு பெத்தாம்பட்டியில் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை மற்றும் தயாரிப்பு கூடம் மற்றும் புதிய நியாயவிலை கடை கட்டிடத்திற்கான பணிகளை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  தொடங்கி வைத்தார்.

 மேலும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி,மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், காவனூரி்ல் புதிய ஊராட்சி மன்ற கட்டடம், புதிய நியாயவிலை கடை மற்றும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்து,பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

இதில்,  மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா ,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பொது விநியோகத் திட்டத்தில், அனைத்து மாவட்டத்திலும் போதிய நிதி வசதி மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ள கூட்டுறவு நிறுவனம் / நிறுவனங்கள், முதன்மைச் சங்கங்களாக செயல்பட்டு பிரதம கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினரின் மாதாந்திர ஒதுக்கீட்டு ஆணையின்படி, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து எடுத்து நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்து வருகின்றன. நியாய விலைக் கடைகளின் மூலம் விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு அரசால் அனுமதிக்கப்படும் விளிம்புத் தொகையை முதன்மைச் சங்கங்களும், இணைப்புச் சங்கங்களும், 40:60 என்ற விகிதத்தில் பங்கிட்டுக்கொள்கின்றன.

வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், ஆகிய பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க அரசால் முடிவெடுக்கப்பட்டு 14.4.2007 முதல் சென்னையிலும் 1.5.2007 முதல் இதர மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

நியாய விலைக்கடைகளில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யும் அத்தியாவசியப் பண்டங்கள் மற்றும் சிறப்பு திட்டத்தின் கீழ் நுகர்பொருள் வாணிபக்கழகத்திலிருந்து பெறப்பட்டு விற்பனை செய்யும் கோதுமை, அரிசி போன்ற பண்டங்களைத் தவிர தேயிலை, சோப்பு மற்றும் காதிப்பொருட்களும் நியாய விலைக்கடையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அப்பொருட்களை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளிலிருந்து அல்லது பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தனியாரிடமிருந்தோ, பதிவாளரால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களிடமிருந்தோ கட்டுப்பாடற்ற பொருட்களை கொள்முதல் செய்து நியாய விலைக்கடையில் விற்பனை செய்யக் கூடாது.

தரமான கட்டுப்பாடற்ற பொருட்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நுகர்வோருக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யக்கூடிய கட்டுப்பாடற்ற பொருட்க ளுக்கு 2008 ஆம் ஆண்டு முதல் பதிவாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சுற்றறிக்கைகளின் மூலம் நியாய விலை கடைகளில் கீழ்கண்ட கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

மளிகைப் பொருட்கள் மற்றும் சுவையூட்டுப் பொருட்கள்,எண்ணெய் பொருட்கள் குடிநீர்மங்கள்,அழகுசாதனப் பொருட்கள்,பிஸ்கட்ஸ், துப்புரவுப் பொருட்கள்,பூஜைப் பொருட்கள், வலி நிவாரணிகள், எழுது பொருட்கள், கொசு விரட்டிகள்,அனைத்து காதிப் பொருட்கள்,அழுகக்கூடிய பொருட்கள் - காய்கறிகள், திருச்செங்கோடு / ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் அரிசி, நல்லெண்ணெய், மஞ்சள் தூள் மற்றும்கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் அரிசி போன்றவைகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News