சிலைமான் அருகே சக்குடி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்
தில்லி விலங்குகள் நலவாரிய தலைவர்- முக்கிய அதிகாரிகள் பங்கேற்று ஜல்லிக்கட்டுப் போட்டியினை க்கொடியசைத்து துவக்கி வைத்தனர்;
மதுரை மாவட்டம், சிலைமான் அருகில் உள்ள சக்குடி ஸ்ரீமுப்புலி சாமிகோவில் மகாசிவராத்திரி உற்சவத்தினை முன்னிட்டு மாபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சிலைமான் அருகில் உள்ள சக்குடி ஸ்ரீமுப்புலி சாமிகோவில் மகாசிவராத்திரி உற்சவத்தினை முன்னிட்டு மாபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் ஏற்பாடு பிரபலமான ஜல்லிக்கட்டு காளைகள் உள்பட 1100 காளைகளும் சிறந்த மாடுபிடி வீரர்கள் உள்பட 800 பேரும் போட்டியில் பங்கேற்றனர். போட்டியினைக் காண பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 2000-க்கும் மேற்ப்பட்டோர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.
மதுரை மாவட்டம், கிழக்கு தாலுகாவில் சக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுப்புலிசாமி கோயில் மகா சிவாராத்திரி பண்டிகையை முன்னிட்டு, வருடந்தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற அனுமதி மறுக்கப்பட்டதால், நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்பொழுது, கொரோனா பரவல் குறைந்து காணப்படுவதால் அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித் துள்ளது.
அதன்படி, சக்குடியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப்பேரவை தலைவர் பி. ராஜசேகர் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது. போட்டியில் 1100 காளைகளும் 800 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஜல்லிக்கட்டு காளைகளும் வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் காளைகளுக்கும் சைக்கிள் / அண்டா / டிரெஸ்ஸிங் டேபிள் மற்றும் ரூ.1000 முதல் ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பணம் வழங்கினர்.
போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளன. அதிக காயங்கள் ஏற்பட்டவர்களை மதுரை அரசு ராசாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுப் போட்டிக்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் தலைமையில் சுமார் 500 -க்கும் மேற்ப்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இப்போட்டியில் தில்லியைச் சேர்ந்த விலங்குகள் நலவாரிய தலைவர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்று ஜல்லிக்கட்டுப் போட்டியினை பச்சைக்கொடியசைத்து துவக்கி வைத்தனர். மேலும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றதா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.