மதுரை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நகர்புற சுகாதார மையங்கள் என 1200 இடங்களில் நடைபெறுகிறது

Update: 2021-11-24 15:00 GMT

மதுரை மாவட்டத்தில் மாபெரும்  இலவச  கொரோனா  தடுப்பூசி முகாம் இன்று  (வியாழன்)  நடைபெறுகிறது:

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் வெளியிட்ட தகவல்: மதுரை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா நோய் தொற்று பரவலின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள தேர்தல் வாக்குச்சாவடி மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நகர்புற சுகாதார மையங்கள் எள 1200 இடங்களில் 18 வயது நிரம்பிய அனைத்து நபர்களுக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம் ( 25.11.2021 -வியாழன்)-இன்று நடைபெற உள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 வயது நிரம்பியவர்களும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்களும் இம் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

இந்த தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்கள் கொரோனா நோய் தொற்றில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள முகாம் நடைபெறும் இடங்களுக்கு தங்களது ஆதார் அட்டையுடன் தவறாது சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென  அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News