மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2023-11-27 09:25 GMT

அலங்காநல்லூர் அருகே  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அலங்காநல்லூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம்  அலங்காநல்லூர் கலைவாணர் நகர் ஏ.எம்.எம். மதுரைப்புலி கவுண்டர் பள்ளி வளாகத்தில் , ராயல் இண்டேன் கேஸ்,மதுரை கோல்டன் ஜூப்ளி லயன்ஸ் கிளப், மதுரை அரவிந்த கண் மருத்துவமனை இணைந்துமாபெரும் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம், கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதற்கு இந்தியன் ஆயில் கார்பரேஷன் பொது மேலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். ராயல் இண்டேன் கேஸ் உரிமையாளர் ராம்தாஸ், முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், மதுரை கோல்டன் ஜூப்ளி லயன்ஸ் கிளப் தலைவர் சிவதாஸ், செயலாளர் மனோகரன், பொருளாளர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயலு, பள்ளி தலைவர் விஜயன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். இந்த முகாமில், கண் மருத்துவர் அப்துல் புத்தாளத் தலைமையிலான மருத்துவ குழுவினர் நோயாளிகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார்கள். சர்க்கரை நோய், கண் விழித்திரை பாதிப்பு, லேசர் சிகிச்சை, இரத்த பரிசோதனை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச லேசர் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். சர்க்கரை நோய் பற்றியும், இதனால் ஏற்படும் கண் விழித்திரை பாதிப்பு பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Tags:    

Similar News